கிளியே நீ சொல்ல வல்லாயோ!!
சொல்ல வல்லாயோ கிளியே! சொல்ல நீ வல்லாயோ!
எல்லையில்லா அன்புக்கு, நாளும், ஏழை நான் அடிமையென்றே!
சொல்ல நீ வல்லாயோ
அல்லலுற்றே உழலும் உலகின் அவலம் துடைப்பதற்கு,
வல்லது ஈதொன்றே என்றவர் வாழ்வில் உணர்வதற்கு! இங்கு
சொல்ல நீ வல்லாயோ
ஆணொடு பெண்ணென்ற பேதம், அவனியில் அன்பிற்கில்லை! (2)
வேண்டுபவர் உள்ளார் இல்லார் என்ற, வேற்றுமை அதற்கில்லை!!
தானொடு தனதென்றே நினைக்கும், தன்னலம் சிறிதுமில்லை! இந்த
தரணிக்கெல்லாம் உழைக்கும், அன்பிற்கு எல்லையில்லை!! என்று
சொல்ல நீ வல்லாயோ
-செபரா
அவனி – உலகம்;